மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-முழுமையான படங்களுடன்
நிகழ்வானது 01-02-2019 அன்று மாலை 3- 30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் கல்லூரி முதல்வர் M.Y.மாஹிர் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
விருந்தினர்களாக
திருவாளர் K.J.பிறட்லி வலையக்கல்விப்பணிப்பாளர் மன்னார்திருவாளர் றிப்கான் பதியுதீன் பிரத்தியோக செயலாளர் கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சு
திருமதி வாசுகி உதவி கல்விப்பணிப்பாளர் வலையம் மன்னார்
திருவாளர் கிறிஸ்துராஜ உதவிகல்விப்பணிப்பாளர் வலையம் மன்னார் திருவாளர் முஜிபூர் ரகுமான் நீண்ட கால மீள்குடியேற்ற அமைச்சின் மன்னார் இணைப்பாளர் இவர்களுடன் கல்வியதிகாரிகள் விளையாட்டு அதிகாரிகள் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பிரதி அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் வைத்து மூர்சீற் விளையாட்டுக்கழகத்திற்கு 350000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் திருவாளர் றிப்கான் பதியுதீன் பிரத்தியோக செயலாளர் கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சு அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்நிகழ்வில் வெற்றி பெற்ற இல்லங்களாக
1ம்-இடத்தினை சம்ஸ் இல்லமும்2ம்-இடத்தினை சிறாஜ் இல்லமும்
3ம் இடத்தினை தாஜ் இல்லமும் பெற்றுக்கொண்டதுடன் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பதக்கம் சான்றிதழ் கிண்ணங்கள் கலந்து கொணட விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கல்லூரி முதல்வர் M.Y.மாஹிர் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
-வை-கஜேந்திரன்-

மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-முழுமையான படங்களுடன்
Reviewed by Author
on
February 02, 2019
Rating:

No comments:
Post a Comment