மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை விரட்ட வேண்டுமா?
குளிர்காலம் வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளித்தொல்லையால் அவதிப்படுவதுண்டு.
சளி பிடித்துவிட்டால், மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்கக்கூடும். இதற்கு சுவாசக் குழாயில் சளித்தேக்கம் அதிகம் இருப்பது தான் காரணம்.
அதுமட்டுமின்றி உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணமாக அமைகின்றது.
சளியைப் போக்க நாம் கடைகளில் விற்கப்படும் டானிக் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி உபயோகிப்பதுண்டு.
இதற்கு நம் வீட்டில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களின் மூலம் வெளியேற்றலாம். அந்தவகையில் சளியை விரட்டும் அற்புத பொருளாக இஞ்சி செயற்படுகின்றது.
தற்போது இஞ்சியை வைத்து மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை எப்படி விரட்டால் என்று பார்போம்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி - 6-7 துண்டுகள்
- மிளகு - 1 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பின் அதில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி வேண்டும்.
இறுதியாக தேன் கலந்து அருந்தவும்.
இதை சளி பிடித்திருக்கும் போது, தினமும் குடித்து வர சளி விரைவில் வெளியேறி உடலுக்கு நல்ல பயன் தரும்.

மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை விரட்ட வேண்டுமா?
Reviewed by Author
on
February 02, 2019
Rating:
No comments:
Post a Comment