முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி!
பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பாக கற்கைநெறியில் சிறப்பு தேர்ச்சி பெற்று, பயிற்சிக்காக விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகிறார்கள்.
செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், குறித்த மாணவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆய்வு மையம் முடிவெடுத்திருந்தது.
அதில் ஈழத் தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய மாணவியான டியானாவும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு அனுப்பப்பட்டு, நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி!
Reviewed by Author
on
February 01, 2019
Rating:
Reviewed by Author
on
February 01, 2019
Rating:


No comments:
Post a Comment