உலகின் மிகப் பெரிய தேனீ இதுதானாம்! ஆராய்ச்சியாளர்கள் வியப்பு -
கடந்த 1981ஆம் ஆண்டுக்குப் பின் வாலஸ் ஜெயண்ட் என்ற தேனீ இனமே அழிந்து விட்டதாக கருதப்பட்டது. கட்டைவிரல் அளவு கொண்ட இந்த தேனீ தான் உலகின் மிகப் பெரிய தேனீயாகும்.
வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தோனேசிய காடுகளில் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வடக்கு மொலுக்காஸ் தீவில் இந்த வாலஸ் ஜெயண்ட் தேனீயை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தேனீயின் சிறகுகள் இரண்டரை அங்குல நீளம் கொண்டவையாகும். ஏறக்குறைய அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இந்த தேனீ இனம், தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


உலகின் மிகப் பெரிய தேனீ இதுதானாம்! ஆராய்ச்சியாளர்கள் வியப்பு -
Reviewed by Author
on
February 24, 2019
Rating:
No comments:
Post a Comment