அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி மனித எலும்புக்கூடுகளை எங்கே ஆய்வு செய்வது-ஏப்பிரல் மாதம் 22 ஆம் திகதி தீர்ப்பு கட்டளை-

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி வழக்கு  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு விசாரனையை எதிர் வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி தீர்ப்புக் கட்டளைக்காக  மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ ஒத்தி வைத்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரியை எங்கே கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பது என்பது தொடர்பான தீர்ப்புக்காக இருந்தது.

இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் மன்னார் நீதவான் இன்றைய தினம் மன்னார் நீதி மன்றத்திற்கு பிரசன்னமாகாத காரணத்தினால் குறித்த வழக்கு எதிர் வரும் ஏப்பிரல் மாதம் 22 ஆம் திகதி தீர்ப்புக் கட்டளைக்காக  தவணையிடப்பட்டுள்ளது. என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவித்தார்.



மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி மனித எலும்புக்கூடுகளை எங்கே ஆய்வு செய்வது-ஏப்பிரல் மாதம் 22 ஆம் திகதி தீர்ப்பு கட்டளை- Reviewed by Author on March 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.