சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே ஒரே வழி: ஜெனீவாவில் வலியுறுத்தினார் கஜேந்திரகுமார்!
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தல் அல்லது சர்வதேச சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே, போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே ஒரு வழிமுறையாகும் என்று தெரிவித்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இடம்பெற்ற பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
31 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதற்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும், குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிராகரித்து வருகின்றனர். இனஅழிப்பினால் பாதிக்கப்பட்டவர்களோ குற்றவியல் நீதியையும், பொறுப்புக்கூறலையும் கோரி நிற்க, இந்த கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இனஅழிப்பால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமரோ, மறப்போம் மன்னிப்போம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் தொடர்ச்சியாக இலங்கை அரசு நிராகரித்து வருகின்ற நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு குற்றவியல் நீதி வழங்க முடியாது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள ஏனை விடயங்களில் பெயரளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னேற்றங்களாக காண்பிப்பதும், தாம் வழங்கிய உறுதிப்பாட்டை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பதும் இலங்கை அரசின் நேர்மையற்ற பண்பையும், கபடத்தனத்தையும் காட்டுகிறது.
இதனடிப்படையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தல் அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதி கிடைப்பதற்கான ஒரேயொரு வழிமுறையாகும் என தெரிவித்தார்.
(தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பிரிவு)
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே ஒரே வழி: ஜெனீவாவில் வலியுறுத்தினார் கஜேந்திரகுமார்!
Reviewed by Author
on
March 14, 2019
Rating:

No comments:
Post a Comment