யாழில் பதற்றம்! விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் -
யாழ். அரியாலை - பூம்புகார் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சென்ற விசேட அதிரடிப்படையினர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் பதற்றம்! விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் -
Reviewed by Author
on
March 17, 2019
Rating:

No comments:
Post a Comment