உலகம் உற்றுநோக்கிய கிம் - டிரம்ப் சந்திப்பு தோல்வி: வெளிவரும் முக்கிய தகவல்கள் -
ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விடயமாக இருந்தது.
ஆனால் வடகொரியா தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அமெரிக்கா நிராகரித்ததையடுத்து
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உச்சிமாநாடு எந்தவித உடன்பாட்டையும் எட்டாமல் முடிந்துள்ளது.
உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் கூட்டு உடன்படிக்கைகையில் கையெழுத்திடும் நிகழ்வுக்கும் அதைத் தொடர்ந்து மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததையடுத்து இரு தரப்பும் இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப், அதாவது உடன்பாட்டு எட்டப்பட்டு கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நாங்கள் கிம் ஜாங் உன் உடன் முழு தினத்தையும் செலவிட்டோம். அவர்கள் முழுமையாக பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை எங்களால் செய்ய முடியாது.
உச்சி மாநாட்டின் முடிவில் நாங்கள் நல்ல நண்பர்களாகியிருக்கிறோம் என நினைக்கிறேன். வடகொரியா நாங்கள் விரும்பிய சில விடயங்களை செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால் நாங்கள் சொல்லும் இடத்தில் நிறைவேற்றத் தயாராக இல்லை என்றார்.
வடகொரியா சில இடங்களை அணு ஆயுதமற்ற பகுதியாக்க ஒப்புக்கொள்கிறது. ஆனால் அமெரிக்கா விரும்பும் இடங்களில் அதை நடைமுறைப்படுத்த தயாராக இல்லை.
மட்டுமின்றி வடகொரியா தங்கள் மீதுள்ள தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரியது.
ஆனால் அவர்கள் கோரிக்கையை ஏற்க முடியவில்லை. நாங்கள் எதிர்பார்ப்பதை அவர்கள் செய்யத் தயாராக இல்லை.
செய்தால், தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கும் வடகொரியாவின் தயார் நிலைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.
குறிப்பாக, அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக. முக்கியத்துவம் அல்லாத அம்சங்களில் அவர்கள் சமரசம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் அது அமெரிக்காவுக்கு ஏற்புடையது அல்ல. அவர்கள் மீதான தடை அனைத்தும் அமுலில் இருக்கின்றன என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் உற்றுநோக்கிய கிம் - டிரம்ப் சந்திப்பு தோல்வி: வெளிவரும் முக்கிய தகவல்கள் -
Reviewed by Author
on
March 01, 2019
Rating:
No comments:
Post a Comment