நீதி வழங்கத் தவறிய ஐ.நாவும் சர்வதேசமும் ! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் -
இலங்கைத்தீவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பரிகார நீதியினை வழங்குவதில் ஐ.நாவும், அனைத்துலக சமூகமும் தவறியுள்ள நிலையில், நீதியினைப் வென்றெடுப்பதற்கான புதியதொரு நீதிப்பொறிமுறை ஒன்றினை எதிர்வரும் மார்ச் 31 ஆம் நாள் அறிவிக்க இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துயரற்ற தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் உருப்படியான முன்னேற்றம் காண ஐ.நா மனிதவுரிமைப் பேரவையும், பன்னாட்டுச் சமூகமும் தவற விட்டதன் எதிரொலியாக இந்த முன் முயற்சி அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துயரற்றவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நேரிட்டது என்ற உண்மையறியவும் அவர்கள் நீதி பெறும் உரிமையுள்ளவர்கள் என்பதால், இந்த உரிமையை நிலை நாட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆவன செய்யும்.
பாதிப்பற்ற தமிழர்கள் சார்பிலான மற்றைய அமைப்புகளும் இந்த முயற்சியில் இனைந்து கொள்ளும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுக்கும்.
சிரியா, மியன்மார், இலங்கை எங்கு நிகழ்ந்தாலும் கொடுமைக் குற்றங்களைப் பன்னாட்டுச் சமூகம் இனியும் 'கண்டுகொள்ளாமல்' இருக்காது என்பதை உறுதி செய்ய, அனைத்து நாடுகளும், மனசாட்சியுள்ள பெருமக்களும் இந்த முன் முயற்சியில் இணைந்து கொள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவி அழைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்திருந்த கொடுஞ்செயற்குற்றங்களைப் புலனாய்வு செய்ய இலங்கை அரசு அடியோடு தவறி விட்டமை பற்றி இந்த தீர்மானம் குறிப்பிடவே இல்லை. இந்தக் குற்றங்களைச் சான்றுகளோடு நிறுவும் மூன்று ஐ.நா அறிக்கைகளைச் சுட்டவே இல்லை, சிறப்பு பன்னாட்டுத் தீர்ப்பாயம் அமைக்க 2015 இல் உயராணையர் பரிந்துரை செய்ததைப் பற்றியும் இத்தீர்மானம் பேசவே இல்லை.
மனிதவுரிமைப் பேரவையின் கடந்த தீர்மமானத்தில் இயற்றப்பட்டதிலிருந்து உயராணையர் ஒவ்வொரு அறிக்கையிலும் குற்றங்களைப் புலனாய்வு செய்யும் மையக் கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றத் தவறி விட்டது என்ற முடிவுக்குப் வந்திருப்பதை கூட இத்தீர்மானம் தவிர்த்துள்ளது.
தீர்மானத்துக்கு முன்னராக ஐ.நா ஆணையாளர் இலங்கை தொடர்பில் தெரிவித்திருந்த நிலைப்பாட்டைக் கூட இத்தீர்மானம் கண்டுகொள்ளவே இல்லை.
போர்குற்றம், இனப்படுகொலை இழைத்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்திட, விடாப்பிடியாகவும், வெளிப்படையாகவும் மறுத்து வரும் இலங்கை அரசினைக் கண்டுகொள்ளாமல், ஐ.நா மனித உரிமைச்சபை பொறுப்பற்ற முறையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.
நம்பகமான நீதிப்பொறிமுறையைத் தொடங்க இலங்கை அரசு தவறியிருப்பதும். இது குறித்துப் ஐ.நா வேண்டுமென்றே கண்ணை மூடிக் கொள்வதும், பாதிக்கப்பட்ட தமிழர்களைத் தொடர்ந்தும் துன்புறுத்துகின்றன. மக்களுக்கு நீதி என்பது வெறும் மிஞ்சியிருக்கும் நடவடிக்கை' மட்டுமன்று.
பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து துன்புறுவது குறித்தான மனிதவுரிமைப் பேரவையின் அலட்சியப் போக்கு இலங்கைக்கு மட்டும் தனித்துவமானதன்று. பன்னாட்டு உறவுகளில் ஒரு புதிய ஊழியில் அடிவைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது, இலங்கையிலும், சிரியாவிலும் மியான்மரிலும் நடந்த கொடுமைகளுக்கு முகங்கொடுப்பதில் நூரம்பர்க்கிலும் யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் வெளிப்பட்ட தீர்க்கமான திடசித்தத்தைக் காணவில்லை. மாறாக, பன்னாட்டுச் சமூகம் அலுத்துச் சலித்து மெத்தனமாகி விட்டது.
கொடுமைக் குற்றங்கள் நிகழும் போது அது வெளிப்படுத்தும் சீற்றம் விரைவாகவும் சங்கடப்படுத்தாமலும் கரைந்து போகிறது.
சிரபிரெனிக்காவில் சிறுவர்கள் உள்ளிட்ட ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டது பற்றிய புலனாய்வுகளும் வழக்குத் தொடுப்புகளும் 1995 இல் உடனே தொடங்கின. பத்தாண்டு கழித்து இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பொறுப்புக்கூறல் நோக்கிய முதலடி கூட இது வரை எடுத்து வைக்கவில்லை.
நூரம்பர்க்கில் தலைமை வழக்குத் தொடுநர் நீதியரசர் ராபர்ட் ஜாக்சன் தன் தொடக்க உரையில் தந்த எச்சரிக்கையைப் பன்னாட்டுச் சமுதாயம் மறந்து விட்டது.
என்ன செலவானாலும், அல்லது அரசியல் வகையில் எவ்வளவு கடினமாய் இருந்தாலும், கொடுமைக் குற்றங்களுக்கு நீதி வழங்க முயற்சி எடுத்தாக வேண்டியது ஏன் என்பதை பின்வருமாறு அவர் விளக்கினார்.
நாகரிகம் இந்தக் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல முடியாது, எனென்றால் அவை மீண்டும் நிகழ்ந்தால் நாகரிகமே பிழைக்காது.' எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி வழங்கத் தவறிய ஐ.நாவும் சர்வதேசமும் ! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் -
Reviewed by Author
on
March 29, 2019
Rating:

No comments:
Post a Comment