சூர்யாவின் NGKவிற்காக ஒதுங்கி கொள்ளும் முன்னணி நடிகரின் படம்!
சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள NGK படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். நீண்ட மாத படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்களின் நீண்ட நாள் நச்சரிப்பிற்கு பிறகு சமீபத்தில் தான் மே 31 என அறிவிக்கப்பட்டது.
இதனால் சூர்யா ரசிகர்கள் அந்த நாளிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள டியர் காம்ரேட் படமும் மே 31ல் தான் வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தனராம்.
ஆனால் NGKவின் ரிலீஸ் தேதியாக அந்த நாள் அறிவிக்கப்பட்ட பின் டியர் காம்ரேட்டின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுவிட்டதாம். கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் NGKவிற்காக ஒதுங்கி கொள்ளும் முன்னணி நடிகரின் படம்!
Reviewed by Author
on
March 31, 2019
Rating:

No comments:
Post a Comment