சாவுக்கும் வரல... கத்தி கதறும் போதும் வரல: சீமான் காட்டம்
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் மும்முரமாகியுள்ளன. இந்த நிலையில் தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
ஓட்டு கேட்டு வருகிறார் ஐயா மோடி. அவருக்கு ஒருத்தர் விடாம ஒட்டு போட்டுட்டு தான் மறுவேலை பார்க்க வேண்டும்.
ஒரு மானம் கெட்ட கூட்டம். சாவுக்கும் வரல. கத்தி கதறும் போதும் வரல. வெட்கம் கெட்டு, மானம் கெட்டு, ஓட்டு பிச்சை கேட்டு மானம் இல்லாம, தமிழ் மக்களிடம் நிக்கிறாங்க.
இதுக்கு ஒரு கட்சி, ஒரு ஆட்சி. வாக்கு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து தான் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்துச்சு. இதற்கு ஒருத்தனும் பதில் பேசவில்லை.
இப்போ கூட்டணிக்கு கூட நாங்கள் தயார் என்று சொல்கிறார்கள். கொலை நடுங்குது... ஏன்னா மோடிக்கு பயம் வந்து விட்டது.
முதலில் மோடியின் நடை எப்படி இருந்தது. இப்போது நடை எப்படி உள்ளது என்பதை பார்த்தீர்களா?.
மோடி அத்வானியை முதலில் கும்பிட்ட கும்பிட்டை நீங்கள் பார்க்கவில்லை. காலை தொட்டு, தொட்டு பேசினார்...
அவரும் நல்ல பையனா இருக்கிறானே... பரவாயில்லை. இந்த பையன் தான் குஜராத்துல முதல்வரா இருக்கானா...ன்னு நம்பினார்.
ஆனால் இப்போது அத்வானி கும்பிட்டு இருக்காரு, மோடி எப்படி போகிறார் என்பது தெரியுமா என காட்டமாக பேசியுள்ளார்.
சாவுக்கும் வரல... கத்தி கதறும் போதும் வரல: சீமான் காட்டம்
Reviewed by Author
on
March 12, 2019
Rating:
Reviewed by Author
on
March 12, 2019
Rating:


No comments:
Post a Comment