தமிழர் ஒருவர் பிரதமராக இருக்க முடியும்! கோத்தபாய ராஜபக்ச
தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராக இருக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாரள் கோத்தபா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன வேண்டுமென்று தமிழ் கட்சிகளுக்கு தெரியாதுள்ளது. தமிழ் கட்சிகள் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
ஆனால் உண்மையில் மக்களுக்கு அந்தத் தேவையில்லை.
பொருளாதார சமநிலையும் நாட்டின் அனைத்து துறையிலும் அபிவிருத்தியும் இருந்தால் தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராகவும் இருக்க முடியும்.
தமிழ் மக்களின் அபிவிருத்திக்காக தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய தேவையில்லை.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது பல விடயங்களைப் பற்றிப் பேசினாலும், அவற்றைச் செயற்படுத்துவதில் தோல்வியுற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
அத்துடன் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படுவதற்கு முன்னதாக அகற்ற வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழர் ஒருவர் பிரதமராக இருக்க முடியும்! கோத்தபாய ராஜபக்ச
 Reviewed by Author
        on 
        
March 09, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 09, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 09, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 09, 2019
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment