100 திமிங்கிலங்களை அதிரடியாக சிறை வைத்த ரஷ்யா...விடுதலைக்காக குவிந்த கையெழுத்துகள்!
ரஷ்யாவில் சமீபத்தில் சுமார் 100 திமிங்கிலங்களை அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாக கூறி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.
இது சூழலியலாளர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியது. மட்டுமின்றி திமிங்கிலங்களை வணிக நோக்கங்களுக்காக விற்பதற்கு அதிகாரிகள் சிறைபிடித்து வைத்திருப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டது.

இதனால் பிடித்து வைத்துள்ள திமிங்கிலங்களை ரஷ்யா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி, பிரபல இணையதளமான change.org இணையதளத்தில் ஒரு ஆன்லைன் மனு உருவாக்கப்பட்டது.
அதன் பின் அந்த மனு சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணையத்தில் மனுவைப் பகிர்ந்திருந்தனர். ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்குக் இது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
அதன் பின் இந்த மனு வெகு விரைவில், 15 லட்சம் பேரால் கையெழுத்திடப்பட்டது. திமிங்கலம் விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் எழுந்ததால், தற்போது ரஷ்யா திமிங்கிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே முன்அனுமதியுடன் திமிங்கிலங்களைப் பிடிக்க முடியும். சமூக ஊடகங்களில் உருவான அழுத்தம் காரணமாக, திமிங்கிலங்களின் விடுதலை சாத்தியப்பட்டிருப்பதாகவும், இதனால் இணையதளம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உணர முடிகிறது என இணையவாசிகள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

100 திமிங்கிலங்களை அதிரடியாக சிறை வைத்த ரஷ்யா...விடுதலைக்காக குவிந்த கையெழுத்துகள்!
Reviewed by Author
on
April 12, 2019
Rating:
No comments:
Post a Comment