ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரியுடன் முடிகிறது -
ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முடிவடைவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றாலும் 19வது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அவரது பதவிக்காலம் 2015 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாவதாகவும் அது குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிவது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.
அத்துடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள லால் விஜேநாயக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் 30(2) சரத்திற்கு அமைய தேர்தல் முடிவுகள் வெளியாகிய நாளில் இருந்தே ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிக்கின்றது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியே ஆரம்பிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரியுடன் முடிகிறது -
 Reviewed by Author
        on 
        
April 12, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 12, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 12, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 12, 2019
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment