சிலாபத்துறையில் மக்களின் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்- 52வது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது-
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினறை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி சிலாபத்துறையில் இன்று சனிக்கிழமை 52 வது நாளாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்று வருகின்றது.
1990 ஆண்டு யுத்தம் காரணமக இடம் பெயர்ந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே தொடர்ச்சியான போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக போராட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரை அரசங்கத்திடம் இருந்தோ கடற்படையிடம் இருந்தோ தங்களுக்கு எந்தவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்றயை தினம் 52 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1990 ஆண்டு யுத்தம் காரணமக இடம் பெயர்ந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே தொடர்ச்சியான போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக போராட்டம் முன்னேடுக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரை அரசங்கத்திடம் இருந்தோ கடற்படையிடம் இருந்தோ தங்களுக்கு எந்தவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்றயை தினம் 52 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிலாபத்துறையில் மக்களின் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்- 52வது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது-
Reviewed by Author
on
April 13, 2019
Rating:
Reviewed by Author
on
April 13, 2019
Rating:

No comments:
Post a Comment