அண்மைய செய்திகள்

recent
-

கடும் வறட்சியின் காரணமாக 56,105 பேர் பாதிப்பு -


தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக பல மாவட்டங்களில் பெரும் எண்ண்pக்கையிலான மக்கள் மிக போசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 15 829 குடும்பங்களைச்சேர்ந்த 56 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணைங்களை வழங்குவதற்காக, பிரதேச செயலாளர் பிரிவுகளூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வறட்சி நிலவும் பகுதிகளில், குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்க முடியும் எனவும் நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, வறட்சியுடனான வானிலையுடன், வனப்பகுதிளுக்கு தீ மூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், இது குறித்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடும் வறட்சியின் காரணமாக 56,105 பேர் பாதிப்பு - Reviewed by Author on April 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.