வெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எது தெரியுமா?
மாம்பழம்
நம்மால் தவிர்க்க முடியாதா பழம் மாம்பழம்; மா, பலா, வாழை என எப்பொழுதுமே மாம்பழம் முன்னிலை வகிக்கும். புத்தருக்கு பிடித்த பழம் இது என்று சொல்வதுண்டு, மேலும் பல ஹிந்து வேதத்திலும் மாம்பழத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இதில் அல்போன்ஸா, இமாம்பசந்த், மல்கோவா என்று பல வகையுண்டு. நிச்சயம் இதை சுவைக்க மறக்காதீர்கள்.தர்பூசணி
இதற்கு தண்ணீர் பழம் என்ற மற்றொரு பெயரும் உண்டு; அதாவது சூட்டை தணிக்கும் சிறந்த அதிக நீர் சத்துக்கொண்ட பழம். 94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம். இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் எ மற்றும் சி. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது.கிர்ணிப்பழம்
தர்பூசணியை தொடர்ந்து கிர்ணிப்பழத்திலும் அதிக தண்ணீர் சத்து உண்டு. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழமும் கண்ணுக்கு நல்லது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் எ மற்றும் சி இன்ஃ பக்சன் தீர்ப்பதோடு சருமத்தை பொலிவடைய செய்யும்.நாவப்பழம்
நாவப்பழத்தின் தனித்துவமான சுவையே இப்பழத்தின் சிறந்த அம்சம். மற்ற பழங்கள் போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பலம் இது. 1.41 மில்லி இரும்பு சத்து , 15 மில்லி கால்சியம் மற்றும் 18 மில்லி வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம் இது.இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக்கொண்ட இந்த பழத்தில் அதிக பாரம்பரிய மருந்து குணங்கள் உண்டு. வேரிலிருந்து பழம் வரை அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அந்தோசியனிகள் புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது.
வெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எது தெரியுமா?
Reviewed by Author
on
April 01, 2019
Rating:
Reviewed by Author
on
April 01, 2019
Rating:


No comments:
Post a Comment