அண்மைய செய்திகள்

recent
-

பிஞ்சுக்குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்த மதகுரு: துடிதுடித்து இறந்த துயர சம்பவம்!


இத்தாலியில் பிஞ்சுக்குழந்தைக்கு விருத்தசேதனம் செய்த பாட்டி மற்றும் மதகுருவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தாலியின் ரோம் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் பிறந்து சில வாரங்களே ஆன பிஞ்சுக்குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது.
இரட்டை குழந்தைகளில் மற்றொரு குழந்தை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.
இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, இறந்த குழந்தைக்கு வீட்டில் வைத்து விருத்தசேதனம் செய்ததாக அவருடைய 25 வயது தாய் கூறியிருக்கின்றார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், குழந்தையின் பாட்டி மட்டும் அப்பகுதியில் 'புனிதமான மனிதன்' என அழைக்கப்படும் மதகுருவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலியை சேர்ந்த ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையானோர் இந்த நடைமுறையை பயன்படுத்துவது கிடையாது. லிபிய வம்சாவளியை சேர்ந்த மக்கள் மட்டுமே இப்படி செய்கின்றனர்.

இத்தாலியில் சுமார் 35 சதவிகித விருத்தசேதனங்கள் வீடுகளில் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விருத்தசேதனம் செய்வதற்கு தனிப்பட்ட முறையில் 3,500 பவுண்டுகள் செலவாகும் என்பதால், பொதுமக்கள் சட்டவிரோதமான முறையில் £ 17 பவுண்டுக்கு வீடுகளில் வைத்தே செய்துகொள்கின்றனர்.

பிஞ்சுக்குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்த மதகுரு: துடிதுடித்து இறந்த துயர சம்பவம்! Reviewed by Author on April 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.