இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை முக்கிய அறிவிப்பு
போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் கத்தோலிக்கர்கள் எவருக்கேனும் தொடர்பு இருந்தால் அவர்கள் கத்தோலிக்கச் சபையிலிருந்து நீக்கப்படுவர் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஜாஎல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற திருப்பலி பூஜையொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பிரச்சினையை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு இன, மத பேதம் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
திருப்பலி பூஜை ஆராதணைகளின் பின்னர் கர்தினால் தலைமையிலான கத்தோலிக்க மதகுருமார், கத்தோலிக்க பக்தர்கள் கூட்டாக இணைந்து அமைதியான முறையில் போதைப் பொருள் ஒழிப்பினை வலியுறுத்தி போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
கொழும்பு – சிலாபம் பாதையில் இந்தப் போராட்டம் முன்னனெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
April 01, 2019
Rating:

No comments:
Post a Comment