லட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்! -
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த 23ம் திகதி மத்திய உளவுத்துறை, கேரள பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி வந்துள்ளனர். இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு, மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளது.
இதனால், கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கேரள கடலோர அனைத்து காவல் நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”
இந்த வியடம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
“இதுபோன்ற எச்சரிக்கைத் தகவல்கள் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த முறை, எத்தனை பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால், உஷார் நிலையில் இருக்குமாறு கேரள கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், கடலோர மாவட்டங்களின் காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லட்சத் தீவுகளில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்! -
 
        Reviewed by Author
        on 
        
May 26, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 26, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment