பதவி விலகி விடுங்கள்! அமைச்சர் ரிசாட்டிற்கு கோரிக்கை - இராஜாங்க அமைச்சர், நிரோஷன் பெரேரா
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர், அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர், நிரோஷன் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு இல்லா விட்டால் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தான் தீர்மானித்துள்ளதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு, இராணுவ தளபதிக்கு அமைச்சர் அழுத்தம் கொடுத்துள்ளதன் மூலம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தடையை ஏற்படுத்துவதாக நிலைபாடு தோன்றியுள்ளது.
ஆகையினால், குறித்த விடயங்களை கருத்திற்கொண்டே, அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாகவும் நிரோஷன் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
பதவி விலகி விடுங்கள்! அமைச்சர் ரிசாட்டிற்கு கோரிக்கை - இராஜாங்க அமைச்சர், நிரோஷன் பெரேரா
Reviewed by Author
on
May 21, 2019
Rating:
Reviewed by Author
on
May 21, 2019
Rating:


No comments:
Post a Comment