பேசாலை வாடைக்காற்று நண்பர்கள் வட்டத்தினால்-நினைவஞ்சலி-படங்கள்
பேசாலை வாடைக்காற்று நண்பர்கள் வட்டத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கான 31ம் நாள் நினைவஞ் சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. நேற்றுமாலைபேசாலை சாரணர் சந்தியில் வாடைக்காற்று நண்பர்கள் வட்டத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கான31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
இந் நிகழ்வானது 21.05.2019 அன்று மாலை பேசாலை சாரணர் சந்தியில் உணர்வுபூர்வமாக கறுப்புவெள்ளை நிறங்களினால் சோடினைகள் மேற்கொள்ளப்பட்டு 500 க்கும் மேற்பட்ட பேசாலைகிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரியோர் சிறுவர்கள் பெற்றோர் எனஅனைவரும் கலந்துகொண்டனர். இதில் உயிர்ந்த ஞாயிறுதாக்குதலில் உயிரிழந்தமக்களுக்காகமெழுவர்த்தி ஏந்தி அக வணக்கத்தை செலுத்தியதுடன் தமதுசெபங்களையும் இறந்துபோனமக்களின் ஆத்மசாந்திக்காக
வேண்டிக்கொண்டனர்.
அமைதியாக இடம்பெற்றஇந் நிகழ்வில் பேசாலைகிராமமக்களுடன் சட்டத்தரனிபிறீமுஸ் சிராய்வாஇபேசாலைபொலிஸ் நிலையபொறுப்பதிகாரி பேசாலை இராணுவபொறுப்பதிகாரி பேசாலை வைத்தியசாலை பொறுப்பதிகாரி இந்துசமயகுருவானவர் பேசாலையின் கல்விமான்கள் மற்றும் தொழிலாளர்கள் எனஅனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கது.

பேசாலை வாடைக்காற்று நண்பர்கள் வட்டத்தினால்-நினைவஞ்சலி-படங்கள்
Reviewed by Author
on
May 22, 2019
Rating:

No comments:
Post a Comment