பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை! -
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் கடந்த, 28 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என தெரிவித்து, ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் இணைந்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்றபோது, இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையிலேயே, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
“பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என, அரசு, மூன்று முறை அறிவித்த பிறகும், தண்டனை அனுபவித்து கொண்டுள்ளனர். அரசு இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது.
உடனடியாக ஏழு பேரையும், ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உன் மகனை உன்னிடம் கொண்டுவந்து சேர்ப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அவரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆளுநர் உடனடியாக கையெழுத்திட்டு 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும்.
சிறைக்கைதிகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது” என்று அற்புதம்மாள் மேலும் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை! -
Reviewed by Author
on
May 11, 2019
Rating:
Reviewed by Author
on
May 11, 2019
Rating:


No comments:
Post a Comment