கீ - சினிமா விமர்சனம்
- திரைப்படம் கீ
- நடிகர்கள் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே. பாலாஜி, அனைகா சோடி, கோவிந்த் பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி
- இசை விஷால் சந்திரசேகர்
- இயக்கம் காளீஸ்
கதாநாயகன் ஜீவா ஒரு கல்லூரி மாணவர் (?). ஆனால், எல்லோருடைய மொபைல் போனையும் ஹாக் செய்யும் வைரஸைக் கண்டுபிடித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நகரில் சிலரது செல்போனிற்கு மர்மமான அழைப்புகள் வருகின்றன. அந்த அழைப்புகளை எடுத்துப் பேசினால், குறிப்பிட்ட ஆட்களை வாகனம் ஏற்றி கொலைசெய்யச் சொல்கிறான் ஒரு மர்ம மனிதன்.
இதற்கிடையில் 'பப்'பில் ஜீவா, அனைகாவைச் சந்திக்கிறார். ஆனால், திடீரென அனைகா இறந்துபோகிறார். இதற்கிடையில் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் நிக்கி கல்ராணியை காதலிக்கிறார் ஜீவா.
சில நாட்களில் ஜீவா மீது வாகனத்தை ஏற்றி யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள். நிக்கி கல்ராணியும் ஜீவாவும் பிரிந்துவிடுகிறார்கள்.
சில பல கம்ப்யூட்டர் சித்து வேலைகளுக்குப் பிறகு, வில்லனைக் கண்டுபிடிக்கிறார் ஜீவா. பிறகு குளிர்பான பாட்டிலில் ஆணியைப் போட்டு, உள்ளே உலர்ந்த ஐஸையும் போட்டு வில்லனையும் அவன் சார்ந்த ஆட்களையும் கொன்றுவிடுகிறார்.
சத்தியமாக மேலே இருப்பதுதான் கதை. கம்பியூட்டரிலும் மொபைல் போன்களிலும் இருக்கும் தகவல்களை யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து பயன்படுத்தும் அபாயம் இருப்பதைச் சொல்வதுதான் இயக்குநரின் நோக்கம் எனப் புரிகிறது.
ஆனால், அதை படமாக்கியிருக்கும் விதம், வில்லனிடமிருந்து வரும் போன் அழைப்பைப் போல கொடூரமாக இருக்கிறது.
எங்கிருந்தோ வரும் போன் அழைப்பை நம்பி எப்படி இத்தனை பேர், இவ்வளவு கொலைகளைச் செய்கிறார்கள்? நீ கொலை செய்யாவிட்டால் காவல்துறையில் சொல்லிவிடுவேன் என வில்லன் மிரட்டுகிறான்.
"பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்": எஸ்.ஜே.சூர்யா
பிரியங்கா சோப்ராவை நடிகர் யோகி பாபுவுடன் ஒப்பிடும் இணையவாசிகள்
ஆனால், கொலை செய்த பிறகு காவல்துறை பிடித்துக்கொண்டு போய்விடுகிறது. அப்போதுகூட மாட்டிக்கொண்டவர்கள், தன்னை மிரட்டுபவர்களைப் பற்றி சொல்ல மாட்டார்களா?
கதாநாயகன் முதலில் அனைகாவுடன் நெருக்கமாக இருக்கிறார். பிறகு எதற்கென்றே தெரியாமல் சண்டை போட்டுவிடுகிறார். பிறகு அவருடைய காரை ஹேக் செய்து கொலை செய்துவிடுகிறான் வில்லன். எதற்காக அந்தக் கொலையைச் செய்ய வேண்டும்?
இப்படி விடைதெரியாத பல கேள்விகளுக்குள் பார்வையாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, திடீர் திடீரென பாடல்கள் வேறு பொறுமையைக் கடுமையாக சோதிக்கின்றன. ஆர்.ஜே. பாலாஜியின் சிரிப்பை ஏற்படுத்தும் முயற்சிகளும் பல தருணங்களில் தோல்வியடைகின்றன.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி ஆகிய எல்லோருக்குமே அவர்களது பட எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கும் என்பதைத் தவிர, சொல்லும்படியான வேறு எந்தப் பலனும் இல்லை.
கீ - சினிமா விமர்சனம்
Reviewed by Author
on
May 12, 2019
Rating:

No comments:
Post a Comment