சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமா?
சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றுகளால் இரத்தத்தில் சிறுநீர், அதிக காய்ச்சல், முதுகு வலி, பசியின்மை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம் என சொல்லப்படுகின்றது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி இந்த தொற்றுநோயை வராமல் தடுக்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை சாப்பிட்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேயேற்றும்.
- தினசரி உணவில் குறைந்தது ஒரு கப் யோகார்ட்டாவது சேர்த்து கொள்ளுங்கள்.
- உரா உர்சி எனப்படும் இலையை காயவைத்து தேநீர் இலைகளுடன் சேர்த்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கவும்.
- தினமும் உணவில் வைட்டமின் சி உள்ள உணவுகளை சேர்த்து கொள்வது உங்களை சிறுநீர்ப்பாதை தொற்று நோயிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
- தினமும் எலுமிச்சை சாறு குடிப்பது உங்களை அனைத்து தொற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.
- வெள்ளரிக்காயில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதால் அதிகளவு நீர் குடிக்க இயலாதபோது வெள்ளரிக்காயை சாப்பிடுங்கள். இது சிறுநீர்ப்பாதை தொற்றுநோயால் ஏற்படும் அபாயத்திலிருந்து காப்பாற்றும்.
- தினமும் அரை கிளாஸ் க்ரான்பெரி ஜுஸை சர்க்கரை இல்லாமல் குடிப்பது உங்களை சிறுநீர்ப்பாதை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும்.
- தினமும் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடியுங்கள். இது சிறுநீர்ப்பாதை தொற்றுநோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கிறது.
- வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமா?
Reviewed by Author
on
May 24, 2019
Rating:
Reviewed by Author
on
May 24, 2019
Rating:


No comments:
Post a Comment