மன்னாரில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவு-படங்கள்
இரண்டாம் தவணைக்கான ஆரம்ப பாடசாலைகள் இன்று திங்கள் கிழமை (13) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதும் மன்னார் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மன்னார் கல்வி வலயத்தில் 22 ஆரம்ப பாடசாலைகள் நேற்று
ஆரம்பிக்கப்பட்டபோதும் 39.5 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு
சமூகமளித்துள்ளதாக மன்னார் கல்வி வலய வட்டாரம் தெரிவித்தது.
பாடசாலைகளில் பலத்த பாதுகாப்பு இடப்பட்டு மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சபையினரும், அசிரியர்களின் பொதிகளை பாதுகாப்பு படையினரும் பரிசோதித்தே பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இரண்டாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பம் கடந்த மாதம் 22ந் திகதி ஆரம்பமாக இருந்தபோதும் கடந்த மாதம் 21ந் திகதி நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பினால் பாதுகாப்பு நோக்கி பாடசாலை ஆரம்பம் பின்போடப்பட்டிருந்தது.
பின் 6ம் ஆண்டு தொடக்கம் 13ம் ஆண்டு வரைக்கான பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைகளுக்கான செயற்பாடுகள் கடந்த வாரம் 6ந் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று திங்கள் கிழமை ஆரம்ப பாடசாலைகளான முதலாம் வகுப்பு
தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான இரண்டாம் தவணைக்கான பாடசாலை வகுப்புக்கள் நேற்று ஆரம்பிக்க்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
May 14, 2019
Rating:

No comments:
Post a Comment