ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது!
ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட வவுனியாவைச் சேர்ந்த மௌலவியை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வவுனியா- செட்டிகுளம், முதலியார் குளத்தை பிறப்பிடமாக கொண்ட முனாஜிப் மௌலவி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவிலிருந்து விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (சனிக்கிழமை) காலை அவர் வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
முனாஜிப் மௌலவி, கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து தனது முகநூலில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்குஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார். குறித்த காணொளியை ஆதாரமாக கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது!
Reviewed by Author
on
May 12, 2019
Rating:

No comments:
Post a Comment