மன்னார் மாவட்டத்தில் உள்ள கைப்பணியாளர்களுக்கு விழிர்ப்பணர்வு நிகழ்வு-பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பங்கேற்பு-
மன்னார் மாவட்டத்தில் உள்ள கைப்பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் கையில் தெரிவு செய்யப்படவுள்ள கைப்பணியாளர்களுக்கு 'ஜனாதிபதி விருது' வழங்குவது தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கைப்பணியாளர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் விசேட நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது.
தேசிய அருங்கலை பேரவையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு நிகழ்வில் கைத்தொழில் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன கலந்து கொண்டார்.
இதன் போது தேசிய ரீதியில் இடம் பெறவுள்ள கைப்பணியாளர்களின் கண்காட்சி மற்றும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 'ஜனாதிபதி விருது' வழங்குவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் கைப்பணி போட்டி கண்காட்சிக்கான முன்னோடி விழிர்ப்புணர்வு வழங்கப்பட்டதோடு, பதிவு செய்யப்படாத கைப்பணியாளர்களின் பதிவுகளும் இடம் பெற்றது.
குறித்த விழிர்ப்புணர்வு கருத்தமர்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கைப்பணியாளர்கள், கைத்தொழில், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதோடு, தேசிய அருங்கலை பேரவையின் உதவிப்பணிப்பாளர் கே.ஜயலத், தேசிய அருங்கலை பேரவையின் உறுப்பினர் டபல்யு,வி.பி.விஜயக்கோன் உற்பட தேசிய அருங்கலை பேரவையின் பிரதி நிதிகள்,தேசிய தொழில் திணைக்களத்தின் முக்கியஸ்தர்கள், என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய அருங்கலை பேரவையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு நிகழ்வில் கைத்தொழில் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன கலந்து கொண்டார்.
இதன் போது தேசிய ரீதியில் இடம் பெறவுள்ள கைப்பணியாளர்களின் கண்காட்சி மற்றும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 'ஜனாதிபதி விருது' வழங்குவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் கைப்பணி போட்டி கண்காட்சிக்கான முன்னோடி விழிர்ப்புணர்வு வழங்கப்பட்டதோடு, பதிவு செய்யப்படாத கைப்பணியாளர்களின் பதிவுகளும் இடம் பெற்றது.
குறித்த விழிர்ப்புணர்வு கருத்தமர்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கைப்பணியாளர்கள், கைத்தொழில், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதோடு, தேசிய அருங்கலை பேரவையின் உதவிப்பணிப்பாளர் கே.ஜயலத், தேசிய அருங்கலை பேரவையின் உறுப்பினர் டபல்யு,வி.பி.விஜயக்கோன் உற்பட தேசிய அருங்கலை பேரவையின் பிரதி நிதிகள்,தேசிய தொழில் திணைக்களத்தின் முக்கியஸ்தர்கள், என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கைப்பணியாளர்களுக்கு விழிர்ப்பணர்வு நிகழ்வு-பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பங்கேற்பு-
Reviewed by Author
on
May 28, 2019
Rating:
Reviewed by Author
on
May 28, 2019
Rating:

No comments:
Post a Comment