அமைச்சர் ரிசாட் தொடர்பாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் -ஆதாரங்கள் இருக்கின்றன!
நாடாளுமன்றில் அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இந்த நிலையில் நாட்டில் இருக்கின்ற மதத் தலைவர்கள், மக்கள் அனைவருமே விரும்பி கேட்பது என்னவென்று சொன்னால் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை விசாரணை செய்ய வேண்டும் என்பதே. இந்த சந்தர்ப்பத்தில் தான் இன்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. என்னை பொருத்தவரையில் அமைச்சராக இருக்கும் போது அவர் மீது முறையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.
அவர் ஒரு அமைச்சராக இருந்த போதும் சகல திணைக்களங்களுக்கும் சட்ட ஒழுங்கு அற்ற நிலையில் பயணம் செய்வது வழமை. அதேபோல ஒரு சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதாரம் இல்லையென்று கூற முடியாது.
300 பேர் வரையில் இறந்துள்ள நிலையில் ஒரு அமைச்சரை காப்பாற்ற முயற்சி செய்வீர்களானால் உங்களுடைய எதிர்காலத்தை மக்களே தீர்மானிப்பார்கள் என இந்த அரசாங்கத்திற்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் ரிசாட் தொடர்பாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் -ஆதாரங்கள் இருக்கின்றன!
Reviewed by Author
on
May 25, 2019
Rating:
Reviewed by Author
on
May 25, 2019
Rating:


No comments:
Post a Comment