உலகின் வேகமான ஆட்டோ.. கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானியர்! -
பிரித்தானியாவின் லண்டன் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மேட் எவரார்டு(46). தொழிலதிபரான இவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு ஈபே விற்பனையாளரிடம் இருந்து ‘பேங்காக் டக் டக்’ எனும் ஆட்டோவை வாங்கினார்.
இந்த ஆட்டோ 1971யில் தயாரானதாகும். இதனை 3,000 யூரோக்களுக்கு வாங்கிய மேட், காரின் 1.3 லி FI எஞ்சினை அதில் பொருத்தினார். அத்துடன் சுமார் 20,000 யூரோக்கள் செலவழித்து ஆட்டோவின் பல பாகங்களை மாற்றி சீட்டாவாக தயார் செய்தார்.
அதன் பின்னர் தனது ஆட்டோவை தீவிர சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தினார். இந்நிலையில், யார்க் நகரில் உள்ள எல்விங்டன் விமான தளத்தில் தனது ஆட்டோவை 119 கிலோ மீற்றர் வேகத்தில் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்தார்.

இந்த ஆட்டோவில் 110 கிலோ மீற்றர் வேகத்தை மேட் அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 119 கிலோ மீற்றர் வேகத்தை எட்டி ஆச்சர்யம் அளித்தார். இதன் காரணமாக உலகின் வேகமான ஆட்டோ என்ற கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட் எவரார்டு கூறுகையில், ‘145 கிலோ மீற்றர் வேகத்தைத் தொட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சீக்கிரமே இந்த ஆட்டோவை 160 கிலோ மீற்றர் வேகம் போவதற்கு டியூன் செய்துவிடுவேன்’ என தெரிவித்துள்ளார்.
உலகின் வேகமான ஆட்டோ.. கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானியர்! -
Reviewed by Author
on
May 15, 2019
Rating:
No comments:
Post a Comment