04தினங்களில் சுமார் 941 வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவில் பூர்த்தி -
நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலை திட்டத்திற்காக முல்லைத்தீவில் இதுவரை சுமார் 229 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி தொடக்கம் இன்று வரையான நான்கு தினங்களில் சுமார் 941 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், குறித்த வேலைத் திட்டங்கள் ஊடாக 54,685 பேர் நன்மை அடைந்துள்ளனர்.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் நான்காவது நாளான நேற்று 262 வேலைத் திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன.
இதற்காக சுமார் 137 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 14000 இற்கும் அதிகமானோர் நன்மையடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
04தினங்களில் சுமார் 941 வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவில் பூர்த்தி -
Reviewed by Author
on
June 07, 2019
Rating:
Reviewed by Author
on
June 07, 2019
Rating:


No comments:
Post a Comment