மன்னார்–பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த 140 kg மேற்பட்ட கேரளக்கஞ்சா...
மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த 140 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த ட்ரோலர் படகொன்றிலிருந்து நேற்று (05) மாலை கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த ரோலர் படகில் இருந்து கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
எனினும், குறித்த படகிலிருந்த சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் ட்ரோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
மன்னார்–பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த 140 kg மேற்பட்ட கேரளக்கஞ்சா...
Reviewed by Author
on
June 07, 2019
Rating:

No comments:
Post a Comment