ஜீவாவின் கொரில்லா படத்தை பார்க்க கூடாது! பீட்டா அமைப்பு கூறும் 5 காரணங்களை...
ஜீவா, அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே, யோகிபாபு, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள காமெடி த்ரில்லர் கொரில்லா. படத்தில் காங் என்கிற குரங்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் நிஜ குரங்கை பயன்படுத்தி உள்ளனர், எனவே கொரில்லா படத்தை பார்க்கக் கூடாது என கூறி தடைகோரியுள்ளது விலங்கு நல அமைப்பான பீட்டா அமைப்பு.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள 5 காரணங்களாவன,
1. குரங்குகளை அதன் தாயிடம் இருந்து பிரிக்கிறார்கள். சின்னத்திரை மற்றும் பெரியதிரையில் பயன்படுத்தப்படும் குரங்குகள் பிறந்த உடனேயே தாயிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன.
2. அந்த குரங்குகளை மோசமாக நடத்துகிறார்கள். பயிற்சியாளர்கள் அவ்வப்போது குரங்குகளை அடிப்பது, எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது என்று கொடுமைப்படுத்துகிறார்கள். குறைந்த டேக்குகளில் காட்சியை படமாக்க அவை துன்புறுத்தப்படுகின்றன.
3. பட காட்சிகள் குறைவாக இருக்கலாம் ஆனால் விலங்குள் அதன் ஆயுள் முழுவதும் கஷ்டப்படுத்தப்படுகின்றன. குரங்குகள் வளர்ந்த பிறகு அவற்றை கட்டுப்படுத்துவது கடினமாகும்போது அவற்றை கூண்டுகளில் அடைத்து தனிமைப்படுத்துகிறார்கள்.
4. உயிருடன் இருக்கும் விலங்குகளை பயன்படுத்துவது தேவையில்லாதது. வெற்றிப் படங்களான பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் மற்றும் தி ஜங்கிள் புக்கில் நிஜ விலங்குகளை அல்ல மாறாக சிஜிஐ தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்தினார்கள்.
5. குரங்குகளை தவறாக சித்தரிப்பது அவற்றின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவாவின் கொரில்லா படத்தை பார்க்க கூடாது! பீட்டா அமைப்பு கூறும் 5 காரணங்களை...
Reviewed by Author
on
June 20, 2019
Rating:

No comments:
Post a Comment