சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தின விற்கு எதிராக மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்-(படம்)
சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி இன்று (12) புதன் கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இன்று புதன் கிழமை(12) மதியம் 1 மணியளவில் பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-சுமார் 30 நிமிடங்கள் வரை குறித்த போராட்டம் இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் ஏந்திய பதைதகளில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.
குறிப்பாக வடக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், எமக்கு எல்லாம் நாறல் மருந்து ராஜிதவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையா?, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இன்று புதன் கிழமை(12) மதியம் 1 மணியளவில் பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-சுமார் 30 நிமிடங்கள் வரை குறித்த போராட்டம் இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் ஏந்திய பதைதகளில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.
குறிப்பாக வடக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், எமக்கு எல்லாம் நாறல் மருந்து ராஜிதவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையா?, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தின விற்கு எதிராக மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்-(படம்)
Reviewed by Author
on
June 12, 2019
Rating:
Reviewed by Author
on
June 12, 2019
Rating:

No comments:
Post a Comment