மண்ணீரல் வீக்கத்தால் அவஸ்தையா? அப்போ இவற்றை எல்லாம் சாப்பிட்டு வீடாதீங்க -
இது வயிற்றின் இடது பகுதியிலுள்ளது. பழைய செங்குருதியணுக்களை குருதியிலிருந்து பிரித்தெடுத்து அகற்றுவது இதன் முக்கிய தொழிலாகும். அத்துடன் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையிலும் இது முக்கிய பங்கு வகிக்கும்.

இத்தகைய மண்ணீரல் வீங்கி இருந்தால், அதனால் சரியாக செயல்படாமல் போவதுடன், இரத்த செல்களை அழிக்கவும் செய்யும். இதனால் நமது உடல் நிலை பெரிதும் பாதிப்படைகின்றது.
மேலும் இது போன்ற பிரச்சினை வர முக்கிய காரணமே நமது உணவு முறை தான்.
அந்தவகையில் மண்ணீரல் பிரச்சினையிலிருந்து விடுபடவும் அதனை இயற்கை வழியில் சரிசெய்யும் சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
சாப்பிட கூடாதவை
வயிற்று வலி இருக்கும் போது, செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும் பொருட்களான இறைச்சி உண்பதைத் தவிர்த்திடுங்கள். இதனால் மண்ணீரல் வீக்கம் குறைவதோடு, வலியும் போய்விடும்.மண்ணீரல் வீக்கம் இருப்பவர்கள், தக்காளியை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகையவர்கள் தக்காளி சேர்த்த உணவை அறவே தவிர்த்தாக வேண்டும். இதில் உள்ள விதை ஏற்கனவே வீங்கியுள்ள மண்ணீரலின் நிலைமையை மோசமாக்கிவிடும்.

புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் ஏராளமாக நிறைந்த மாட்டிறைச்சியை எப்போதும் தொடக்கூடாது. மேலும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை ஒரே வேளையில் அதிகமாக சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கவும் வேண்டும்.
மது அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும். அதோடு நிக்கோட்டின் மற்றும் கார்போனேட்டட் பானங்கள் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால் மண்ணீரலின் நிலைமை மோசமாவதோடு, எதிர்பார்க்காத தீவிர விளைவை சந்திக்க நேரிடும். எனவே இதை கட்டாயம் செய்ய வேண்டும்.
மிகவும் சூடான உணவுகளை எப்போதும் உட்கொள்ளக்கூடாது. சூடான உணவுகள் மண்ணீரல் வீக்கத்தை மோசமாக்கும். எனவே வெதுவெதுப்பான நிலையில் எதையும் உட்கொள்ளுங்கள்.
எப்படி சரி செய்வது
- நாவல் பழம் மண்ணீரல் வீக்க பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
- வெண்காரம் 12 கிராம் மற்றும் கடுகு விதை 20 கிராமை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் தினமும் இரண்டு வேளை 1 கிராம் என்ற கணக்கில் உட்கொண்டு வர, மண்ணீரல் வீக்கம் குறையும்.
- தினமும் 1-2 டம்ளர் நற்பதமான ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால், நிணநீர் மண்டலம் சுத்தமாவதோடு, வீங்கிய மண்ணீரலும் இயற்கையாக குறைய ஆரம்பிக்கும்.
- தினமும் 3-4 லிட்டர் நீரில் 2-3 டேபிள் ஸ்பூன் சோம்பு மற்றும் 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலந்து, தினமும் சாதாரண நீருக்கு பதிலாக இந்த நீரைக் குடிப்பதால், மண்ஷீர் வீக்கம் சரியாகும்.
- 1 கப் பீட்ரூட் ஜூஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிப்பதால், மண்ணீரல் நன்கு செயல்படுவதோடு வலிமையாகவும் செய்யும்.
- தினமும் 200-250 கிராம் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், மண்ணீரல் வீக்கம் மற்றும் அழற்சி போன்றவை சரியாகும். மேலும் மண்ணீரலால் ஏற்படும் வலியும் நீங்கும்.
- நார்ச்சத்து அதிகம் நிறைந்த தானியங்கள், பீட்ரூட், கேரட் மற்றும் கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால், மண்ணீரல் வீக்கத்தைத் தவிர்க்கப்படுவதோடு, அதன் ஆரோக்கியம் மேம்படவும் ஆரம்பிக்கும்.
- குடைமிளகாயில் உள்ள வைட்டமின் சி, மண்ணீரல் வீக்கத்தை சரிசெய்வதோடு, அதில் உள்ள இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் மண்ணீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மண்ணீரல் வீக்கத்தால் அவஸ்தையா? அப்போ இவற்றை எல்லாம் சாப்பிட்டு வீடாதீங்க -
Reviewed by Author
on
June 04, 2019
Rating:

No comments:
Post a Comment