வடக்கில் சோதனைசாவடிகளின் எண்ணிக்கை குறைப்பு! யாழ். கட்டளை தளபதி உறுதி -
வடக்கில் உள்ள இராணுவ சோதனை சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“யாழிலிருந்து, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, செல்லும்போதும், வரும்போது தெற்கில் இல்லாத அளவுக்கு, பெரும் எண்ணிக்கையில் அடிக்கடி, ஏற்றி இறக்கும் சோதனை கெடுபிடிகள் இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்தது.
இதனையடுத்து, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சியுடன் நேற்று தொலைபேசியில் கதைத்திருந்தேன். வடக்கில் இருந்து வந்த புகார்களை சொன்னேன்.
தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளாக்குவதாக கருத்து நிலவுவதாக சொன்னேன். இதற்கு பதிலளித்து பேசிய யாழ்.மாவட்ட கட்டளை தளபதி,
“ஐ.எஸ் பயங்கரவாதம் மூலம் வடக்குக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதே எம் கரிசனை. இப்போ நிலைமை சுமூகமாகி வருகிறது. சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன்” என உறுதியளித்துள்ளார்.
வடக்கில் சோதனைசாவடிகளின் எண்ணிக்கை குறைப்பு! யாழ். கட்டளை தளபதி உறுதி -
Reviewed by Author
on
June 05, 2019
Rating:

No comments:
Post a Comment