வீடு ஒன்றின் விலை 1 ஃப்ராங்கு மட்டுமே!... சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -
சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியிலுள்ள இத்தாலி மொழி பேசும் நகராட்சி ஒன்று, சுமார் ஒன்பது வீடுகளை வீடு ஒன்றிற்கு வெறும் ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு விற்க முன்வந்துள்ளது.
இத்தாலிய எல்லையில் அமைந்திருக்கும் ஆளரவமற்ற ஆனால் அழகான Monti Scìaga என்னும் அந்த கிராமத்தில் மீண்டும் மக்களை குடியமர்த்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நகர கவுன்சில், மலையேற்றம் செய்பவர்களுக்காகவும், சைக்கிள் பயணம் செய்பவர்களுக்காகவும் தற்காலிக தங்குமிடங்களை நிறுவ விரும்புவதோடு, ஒன்பது வீடுகளை ஒரு சுவிஸ் ஃப்ராங்குக்கு விற்கவும் முடிவு செய்துள்ளது.
ஆனால் ஒன்று, வீடு வாங்குபவர்கள்தான் வீட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், அதுவும் உள்ளூர் சட்டத்திற்குட்பட்டு...
சமீப காலமாகவே வேலை தேடி நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதையடுத்து பல கிராமங்கள் வெறிச்சோடிப்போனதைத் தொடர்ந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நகரங்களிலும் இதே போலவே மிகக் குறைந்த விலையில் வீடுகளை விற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் இந்த அதிரடி விற்பனையில் இறங்கியுள்ளது.
வீடு ஒன்றின் விலை 1 ஃப்ராங்கு மட்டுமே!... சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -
Reviewed by Author
on
July 18, 2019
Rating:

No comments:
Post a Comment