விமான விபத்தில் 346 பேர் பலி.. குடும்பத்தை இழந்த தந்தை கதறல்: 50 மில்லியன் டாலர் இழப்பீடு -
இந்த இழப்பீட்டு விநேியோகத்தை மேற்பார்வையிட நிபுணர் கென் ஃபெயன்பெர்க்கை அந்நிறுவனம் நியமித்துள்ளது. போயிங் நிறுவனத்தின் இந்த இழப்பீடு அறிவிப்பு விளம்பரத்திற்காக என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபரில் இந்தோனேசியாவில் நிகழ்ந்த லயன் ஏர் பேரழிவுக்குப் பின்னர் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த இரண்டு விபத்துக்களில் 346 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து, போயிங்கின் சிறந்த விற்பனையான ஜெட் விமானம் 737 மேக்ஸ் மார்ச் மாதத்தில் உலகளவில் ரத்து செய்யப்பட்டது.
மார்ச் மாதத்தில் 737 மேக்ஸ் எத்தியோப்பியன் விமான விபத்தில் மூன்று குழந்தைகளையும், அவரது மனைவியையும், மாமியாரையும் இழந்த பால் என்ஜோரோஜின், அமெரிக்க பிரதிநிதிகள் சபை விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளித்தார். விசாரணைக்கு சில நிமிடங்களுக்கு முன்னர், போயிங் நிறுவனம் இழப்பீடு மற்றும் ஃபெயன்பெர்க்கின் பணியமர்த்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கென்யாவில் பிறந்து கனடாவில் வசிக்கும் 35 வயதான நஜோரோஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, போயிங் முன்னோக்கி செல்வதை பொதுமக்கள் ஏற்பார்கள் என்று தான் நினைக்கவில்லை. நீங்கள் அந்த விமானங்களில் பறக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள் அந்த விமானங்களில் பறக்க விரும்புகிறீர்களா?" என்று கேட்ட நஜோரோஜ், எனக்கு குழந்தைகளே இல்லை என துயரத்தில் வருந்தியுள்ளார்.

மேலும், விமானத்தின் விபத்துக்குள்ளான போது எனது குழந்தைகள் அழுகிற தாயை எப்படி கட்டிப்பிடித்து கதறி இருப்பார்கள் என்பது பற்றிய கனவுகள், தினம் தினம் என்னை கொல்கிறது என நஜோரோஜ் கூறினார். அதேசமயம், அப்பாவி விமானிகளுக்கு, புதிய மற்றும் குறைபாடுள்ள எம்சிஏஎஸ் அமைப்பு பற்றிய எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்று போயிங் நிறுவனம் மீது நஜோரோஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
நஜோரோஜ் எழுப்பிய குறிப்பிட்ட கேள்விகளுக்கு போயிங் பதிலளிக்கவில்லை, ஆனால் ஒரு அறிக்கையில் இந்த இரண்டு விபத்துக்களிலும் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு நாங்கள் உண்மையிலேயே மிகவும் வருந்துகிறோம் என்று கூறியுள்ளது.
மேலும், புதிய மென்பொருள் குறைபாடு தோன்றிய பின்னர், நிறுவனம் செப்டம்பர் வரை எம்சிஏஎஸ் மென்பொருள் மேம்படுத்தல் மற்றும் பயிற்சி திருத்தத்தை சமர்ப்பிக்காது என்று ஒரு போயிங் அதிகாரி கடந்த மாதம் தெரிவித்தார், அதாவது நவம்பர் வரை 737 மேக்ஸ் விமானங்கள் பறக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விபத்துக்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவ உள்ளூர் அரசாங்கங்களுக்கும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் சில ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாக போயிங் தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் 346 பேர் பலி.. குடும்பத்தை இழந்த தந்தை கதறல்: 50 மில்லியன் டாலர் இழப்பீடு -
Reviewed by Author
on
July 19, 2019
Rating:
Reviewed by Author
on
July 19, 2019
Rating:


No comments:
Post a Comment