மடுவில் புனித தூயகப்பகுதி அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-படம்
வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள மடுமாதா திருத்தலத்தின் மருதமடுத் திருத்தாயார் எழுந்தருளியிருக்கும் தூயகப் பகுதியை விசாலமாக்கும் பணித்திட்டத்தின் கீழ் புதிய தூயகப்பகுதி க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை 1.07.2019 காலை மடுவில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு அமைச்சர் சஜித் பிரேமதாச வருகை தந்து பணிக்கான நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்து அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் முதன்முதலாக மருதமடுத் திருத்தாயின் திருவுருத்தற்குச் சென்று ஆசீர் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வும், அடிக்கல் நாட்டும் நிகழ்வும், கூட்டமொன்றும் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மாவட்ட அரச அதிபர் சி.ஏ. மோகன்றாஸ், கலாச்சார அமைச்சின் செயலாளர் பேணாட் , மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, மடுத்திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை, கலாச்சார அமைச்சின் பணித்திட்ட இயக்குனர் திருமதி.தாரனி அனோஜா கமகே, அரசின் அபிவிருத்தி, கட்டுமானம், ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான முதல்வர் பொறியியலாளர் ஜெயச்சந்திரன், மடு பிரதேச செயலர் மற்றும் பல உயர் நிலை பணியார்களும் கலந்து கொண்டனர்.

Reviewed by Author
on
July 03, 2019
Rating:
Reviewed by Author
on
July 03, 2019
Rating:

No comments:
Post a Comment