இருளில் மூழ்கிய ஐந்து மாவட்டங்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை -
இன்று வீசிய பலத்த காற்றின் காரணமாக கொழும்பு உட்பட ஐந்து மாவட்டங்களின் பல பிரதேசங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடும் மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் மின் தூண்கள் மீது முறிந்து வீழ்ந்துள்ளதால் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மாத்தறை, காலி, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சேதமடைந்த மின் இணைப்புகளை மீட்டெடுக்க மின்சாரசபை நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், சீரற்ற வானிலை காரணமாக பழுதுபார்க்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்சன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாக பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வீதிகளில் நீர் பாய்ந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இருளில் மூழ்கிய ஐந்து மாவட்டங்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை -
Reviewed by Author
on
July 19, 2019
Rating:
Reviewed by Author
on
July 19, 2019
Rating:


No comments:
Post a Comment