மலேரியா நோய் தொடர்பில் வெளியான புதிய அதிர்ச்சி தகவல் -
இதனை தடுப்பதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மாத்திரைகள் காணப்படுகின்ற போதிலும் முற்றிலும் தடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இப்படியிருக்கையில் தற்போதுள்ள மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறைகளை எதிர்த்து நோயைப் பரப்பக்கூடிய மலேரிய ஒட்டுண்ணிகள் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவிலேயே இந்த அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம் மற்றும் தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆய்வின்போது இவ்வாறான ஒட்டுண்ணிகள் கம்போடியாவில் இருந்து லுாஓஸிற்கும், தாய்லாந்திலிருந்து வியட்நாமிற்கும் பரவிவருகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ் ஆபத்தான மலேரியா ஒட்டுண்ணிகள் ஆபிரிக்காவிற்கு பரவுவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேரியா நோய் தொடர்பில் வெளியான புதிய அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
July 26, 2019
Rating:
Reviewed by Author
on
July 26, 2019
Rating:


No comments:
Post a Comment