வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி -
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இரு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பை வெல்லாத காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பாப்பு இருந்தது. அதற்கேற்றவாறே இன்றைய போட்டியும் நடந்து முடிந்துள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 241 ரன்களை குவிந்திருந்தது.
இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர், ராய் மற்றும் பிரைஸ்டோ மைதானம் பந்து வீச்சிற்கு ஏற்றது என்கிற காரணத்தால் ஆரம்பத்திலே திணற ஆரம்பித்தனர்.
ஜேசன் ராய் 17 ரன்களிலும், ஓரளவு நிலைத்து நின்ற ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 7, கேப்டன் மோர்கன் 9 என சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரும் அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால் பரிதாப நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் - ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்து தூக்கி நிறுத்தியது.
ஜோஸ் பட்லர் 59 ரன்கள் எடுத்திருந்த போது பெர்குசன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திற்கு நடையை காட்டினர்.
வெற்றிக்கு கடைசி 9 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது, 49வது ஓவரின் கடைசி பந்தில் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் ஸ்டோக்ஸ் சிக்ஸ் அடித்தார். நீஷம் ஒரே ஓவரில் 2 விக்கெட்கள் எடுத்தார்.
இங்கிலாந்து வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் தேவைபட்ட போது, நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்டோக்ஸ் மட்டும் மைதானத்தில் இருந்தார்.
கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் இல்லை. மூன்றாம் பந்தில் ஸ்டோக்ஸ் சிக்ஸர் அடித்தார். நான்காம் பந்தில் இரண்டு ரன்கள் ஓடினார். அப்போது நடந்த ரன் அவுட் முயற்சி ஓவர் த்ரோவாகி கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தது.
இது இங்கிலாந்திற்கு சாதகமாக மாறியது. ஐந்தாம் பந்தில் ஸ்டோக்ஸ் ஒரு ரன் ஓடி விட்டு, இரண்டாம் ரன் ஓட முயற்சி செய்த போது மார்க் வூட் ரன் அவுட் செய்யப்பட்டார். களத்தில் ஸ்டோக்ஸ் மட்டும் 84 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இதனையடுத்து வரலாற்றில் முதன்முறையாக சூப்பர் ஓவர் முறை கைப்பிடிக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் - பென் ஸ்டோக்ஸ் 6 பந்தில் 15 ரன்கள் குவித்தனர்.
16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் நியூசிலாந்து அணி சார்பில் கப்டில் - நீஷம் களமிறங்கினர். 6 பந்துகளுக்கு 15 ரன்களை குவிந்திருந்த போதிலும், இங்கிலாந்து 3 பவுண்டரிகள் அடித்திருந்ததால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி -
Reviewed by Author
on
July 15, 2019
Rating:
Reviewed by Author
on
July 15, 2019
Rating:



No comments:
Post a Comment