உலகிலேயே முதன் முறை.. கடலுக்கு அடியில் ராணுவ அருங்காட்சியகத்தை அமைத்த நாடு!
தென் மேற்கு ஆசிய கண்டத்தில், செங்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடு ஜோர்டான். இந்நாட்டிற்கு பவளப்பாறைகளை பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.
எனவே, தனது நாட்டின் ராணுவ பலத்தை விளக்கும் வகையில், ஜோர்டான் ஒரு புதிய அருங்காட்சியத்தை கடந்த புதன்கிழமை அன்று திறந்தது. இந்த அருங்காட்சியகம் தெற்கு துறைமுகமான அகாபாவில், செங்கடலில் 90 அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் பவளப்பாறைகளின் இடையே பீரங்கிகள், ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கவச வாகனங்கள் ஆகியவை நீருக்குள் நிறுத்தப்பட்டுள்ளன.

இவை ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு கடலில் இறக்கி விடப்பட்டவை. எனவே, இந்த அருங்காட்சியகத்தை எளிதாக கண்டுவிட முடியாது. கண்ணாடியாலான அடிப்புறம் கொண்ட படகுகளில் செல்பவர்கள் மட்டுமே இதனைக் கண்டு களிக்கலாம்.
இந்தத் திட்டத்திற்கு என கைவிடப்பட்ட ராணுவ காட்சிப் பொருட்களை, அந்நாட்டு ராணுவம் இலவசமாக வழங்கியுள்ளது. விரைவில் இங்கு ராணுவ பொருட்களோடு சுற்றுச் சூழல் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளைச் சேர்ந்த பொருட்களும் இணைக்கப்படும் என்று அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோடைக் காலத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும், அகாபா சிறப்பு பொருளாதார மண்டலத்தின் ஒரு திட்டமாக இது செயல்படுத்தப்பட்டுள்ளது.




உலகிலேயே முதன் முறை.. கடலுக்கு அடியில் ராணுவ அருங்காட்சியகத்தை அமைத்த நாடு!
Reviewed by Author
on
July 29, 2019
Rating:
No comments:
Post a Comment