மன்னார் கோந்தை பிட்டியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்பு---
மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கியின் ஒரு தொகை ரவைகளை மன்னார் பொலிஸார் நேற்று சனிக்கிழமை 06-07-2019 மாலை மீட்டுள்ளனர்.
சிலாபத்துறை கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸாந்த தலைமையில் சென்ற பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கோந்தை பிட்டி பகுதியில் உள்ள குறித்த வீட்டின் வளாகத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது தென்னை மரம் ஒன்றிற்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
சிங்கள பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்டடு புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக தூப்பாக்கிக்கு பயன்படுத்தும் 14 ரவைகளை இவ்வாறு மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் வளாகத்தில் எவ்வாறு குறித்த ரவைகள் புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிலாபத்துறை கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸாந்த தலைமையில் சென்ற பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கோந்தை பிட்டி பகுதியில் உள்ள குறித்த வீட்டின் வளாகத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது தென்னை மரம் ஒன்றிற்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
சிங்கள பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்டடு புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக தூப்பாக்கிக்கு பயன்படுத்தும் 14 ரவைகளை இவ்வாறு மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் வளாகத்தில் எவ்வாறு குறித்த ரவைகள் புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கோந்தை பிட்டியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்பு---
Reviewed by Author
on
July 08, 2019
Rating:

No comments:
Post a Comment