மன்னாரில்-விவசாய குளப்பகுதியில் சட்டபூர்வமற்ற மணல் அகழ்வால் விவசாயிகள்,கால்நடைகளுக்கு ஆபத்து.
மன்னாரில் மத்திய நீர்பாசனத் திட்டத்துக்குள்ள விவசாய குளப்பகுதி ஒன்றில்
மிக ஆழமாக தோண்டி மணல் அகழ்வு இடம்பெறுவதால் இதன் காரணமாக பல தரப்பட்ட ஆபத்துக்களை அப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்குவதாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் சம்பவம் பற்றி தெரியவருவதாவது மன்னார் மாந்தை மேற்கு பிரதேச
செயலகத்துக்கு உட்பட்ட பகுதியான கருங்கண்டல் குளத்தடிப் பகுதியில் மத்திய நீர்பாசன திட்டத்துக்குட்பட்ட கருங்கண்டல் குளத்தடியில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் குளப்பகுதி மத்திய நீர்பாசன திணைக்களத்துக்கு உரிமையுடையதாக
இருப்பதால் இங்கு மணல் அகழ்வு செய்வதென்றால் மன்னாரிலுள்ள மத்திய
நீர்பாசன பொறியியலாளர் திணைக்களமே அனுமதி வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இதற்கு பொறுப்பானவர்களிடம் அனுமதி பெறாமலே சட்டபூர்வமற்ற முறையில் இவ் மணல் அகழ்வு நடைபெறுவதாக இவ் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிப்பதுடன் இது விடயமாக கம விதானை தலைமையில் கருங்கண்டல்குளப் பகுதி விவசாயிகள் பொறியியலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுனர் அகியோருக்கு மகஐர்கள் மூலமாக புகாரிட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் கருங்கண்டல் குளத்தடியில் சுமார் பத்து, பதினொரு அடி ஆழத்தில் மணல் அகழ்வு செய்யப்பட்டு வருவதால் அப் பகுதியில் பெருந் தொகையான கால்நடை இருப்பதாகவும் தோண்டப்படும் இவ் கிடங்குக்குள் கால்நடை விழுந்து மரணிக்கும் சந்தர்ப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இவ் குளத்தடியோரத்தில் நடைபாதை அமைந்திருப்பதுடன் இவ் மணல் அகழ்வால் இவ் பாதைக்கும் ஆபத்து எற்பட்டு வருவதாகவும் இப் பகுதி
விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment