தமிழ் பேசும் மக்கள் நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் துன்பத்திலும் போராட்டத்திலும் பங்காளிகளே-மௌலவியான S.A.ஆசீம்
தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகளின் துன்பததிலும் அவர்களின் போராட்டத்திலும் நாம் பங்காளிகளாக
இருந்து நீதி நியாத்துக்காக போராடுகின்றோம் என மன்னார் மாவட்ட பிரiஐகள்
குழு ஆளுனர் நிர்வாக உறுப்பினரும் மன்னார் மூர் வீதி பள்ளிவாசல் மௌலவியான எஸ்.ஏ.ஆசீம் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்று வியாழக் கிழமை (11.07.2019) மன்னார் பிரஜைகள் குழு மற்றும்
மன்னார் நகர சபை ஆகியோரின் அனுசரனையுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்ட போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடைபெற்றது.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுனர் நிர்வாக உறுப்பினரும் மன்னார் மூர் வீதி பள்ளிவாசல் மௌலவியான எஸ்.ஏ.ஆசீம் இங்கு தொடர்ந்து பேசுகையில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த பத்து வருட காலமாக வடக்கு கிழக்கு பகுதியில் தங்களை விட்டு பிரிந்து நிற்கும் தங்கள் உறவுகளுக்காக, நீதி நியாயத்துக்காக ஏங்கிக் கொண்டு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் பேசும் மக்களாகிய நாங்களும் இவர்களின் துன்பங்களிலே
போராட்டத்திலும் பங்கு கொண்டவர்களாக நீதி நியாத்துக்கான போராட்டத்தில் பங்காளிகளாக இருக்கின்றோம்.
2009 ஆம் ஆண்டில் சமாதான நிலை உருவாகி தற்பொழுது பத்து வருடங்கள் கடந்து சென்றும் இன்னும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்காக வீதிகளில் இருந்து கொண்டு அரசுக்கும் சர்வதேசத்துக்கும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதை இந்த அரசானது நீதியை நிலைநாட்ட வேண்டும் என எதிர்பார்த்து
நிற்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் இன்னும் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்பதை அரசானது உறுதிப்பட தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துன்பத்திலும் ஒரு ஆறுதலுடன் இருப்பது மாத்திரமல்ல அவர்களுக்காக தங்கள் மத அனுஷ்டானம் செய்து இறைவனிடம் வேண்டக்கூடியதாக இருக்கும் என்றார்.

Reviewed by Author
on
July 12, 2019
Rating:

No comments:
Post a Comment