பிரதேச சபை உறுப்பினர்கள் திருக்கேதீஸ்வர வளைவு விடயத்தை என்னிடம் ஒப்படைத்தமையாலே நான் செயல்பட்டேன். தவிசாளர் S.H.M.முஜாஹீர்
திருக்கேதீஸ்வர வளைவு அமைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி
வழங்கியிருந்தமையாலும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் இதற்கான
பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தமையாலும் நான் அனுமதி வழங்கினேன். இருந்தும் சமய நல்லிணக்கத்தை கவனத்துக்கு எடுக்குமாறு பலர் என்னை வேண்டிக் கொண்டமையால் அதை தற்பொழுது இடை நிறுத்தியுள்ளேன் என மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐhஹீர் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு விடயமாக மன்னார் பிரதேச சபையின் அவசரக் கூட்டம் இதன் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐhஹீர் தலைமையில் வியாழக் கிழமை (04.07.2019) நடைபெற்றது.
இருபத்தொரு உறுப்பினர்களைக் கொண்ட இக் கூட்டத்தில் இரு உறுப்பினர்களைத் தவிர ஏனையோர் கலந்து கொண்டனர். இவ் கூட்டத்தில் செய்தியாளர்களைத் தவிர ஏனையோருக்கு பார்வையாளர் கலரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இவ் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐhஹீர்
தொடர்ந்து பேசுகையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு சம்பந்தமாக ஒரு அவசர கூட்டம் ஒன்றை கூட்டுமாறு எமது மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஐஸ்ரின் இயூற் கொன்சன் குலாஸ் 13 உறுப்பினர்களின் கையெழுத்துடன் என்னிடம் கடிதம் ஒன்றை சமர்பித்திருந்தார்.
அதற்கமைய இக்கூட்டம் இன்று (வியாழக் கிழமை 04.07.2019) கூட்டுவதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இவ் கூட்டம் நடைபெறுகின்றது. இந்த திருக்கேதீஸ்வரம் வளைவுக்கு அனுமதி வழங்கப்பட்டதும் பின் அது இடை
நிறுத்தப்பட்டதும் தொடர்பாக நான் இவ் சபை உறுப்பினர்களுக்கு முதலில்
விளக்கம் கொடுக்க வேண்டியவனாக இருக்கின்றேன்.
திருக்கேதீஸ்வர வளைவு விடயமாக என்னிடம் வழங்கப்பட்ட தகவலின்படி
2014.02.24 ந் திகதி இவ் திருக்கேதீஸ்வர வளைவுக்கு சட்டப்படி அனுமதி
கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ் சமயம் அப் பகுதியில் மனித புதைகுழி
இனம் காணப்பட்டதால் இவ் வளைவை அமைப்பதற்கு பாதுகாப்பு படையினர்
அனுமதிக்கவில்லை.
பின் மீண்டும் இது அமைப்பதற்கு எங்களிடம் அனுமதி கோரி வந்தபோது அனுமதி பெற்று ஒரு வருடத்துக்குள் அமைக்காவிட்டால் மீண்டும் இதற்கான அனுமதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்றுவர வேண்டும் என
தெரிவிக்கப்பட்டதுக்கமைய இவர்கள் மீண்டும் அனுமதி பெற்று வந்தனர்.
இது விடயமாக அமைச்சர் மனோ கணேசன் மன்னார் மாவட்ட செயலாளருக்கு ஊடாக இது விடயமாக அனுமதி பெற்று இவ் சபைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்த விடயமாக நல்லிணக்கத்தை பேணுமுகமாக நான் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தேன். இது விடயமாக இரு சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன. அப்பொழுது இது சம்பந்தமாக கருத்துக்கள் விவாதிக்கப்பட்டதுடன் முதலில் அவ்விடத்தை இவ் சபை உறுப்பினர்கள் பார்வையிட்டபின் தீர்மானத்தை
மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
பின் 23.04.2019 அன்று எமது உறுப்பினர்கள் சிலருடன் அவ்விடத்தை
பார்வையிட்டோம். அப்பொழுது அங்கு வந்திருந்த வீதி சம்பந்தமான அதிகாரிகள் தெரிவிக்கையில் பிரதான வீதி மத்தியிலிருந்து ஐம்பது அடி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தானது. அதிலிருந்து திருக்கேதீஸ்வர கோவில் வரையும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு உரிமையானது எனவும் ஆகவே இவ்விடத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான எந்த இடத்திலும் வளைவு அமைக்க தடை இல்லையென தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்நது சிநேக பூர்வமான ஒரு கூட்டத்தில் உப தவிசாளர் என்னிடம் தெரிவிக்கையில் வளைவுக்காக மற்றவர்கள் அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் நீங்கள் ஏன் இன்னும் அனுமதி வழங்காதிருக்கின்றீர்கள் என வினவினார்.
அப்பொழுது அங்கு இருந்த 13 உறுப்பினர்களும் தவிசாளராகிய என்னிடம் இவ்
விடயத்தை பொறுப்பளித்து விட்டு அவர்கள் தெரிவிக்கையில் அவ்வாறு
பிரச்சனைகள் தலைதூக்குமாகில் அவர்கள் இரு பகுதினரும் நீதிமன்றத்தை நாடிக் கொள்ளட்டும் என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்தே நான் வளைவு அமைப்பதற்கான அனுமதியை அவர்களுக்கு வழங்கினேன். இதைத் தொடர்ந்து ஆயர் இல்லத்தின் சார்பாக சிலர் என்னை வந்து சந்தித்தனர். தொடர்ந்து ஆயர் இல்லத்துக்கு என்னையும் எமது சில உறுப்பினர்களையும் ஆயர் இல்லத்துக்கு இது விடயமாக உரையாட அழைத்திருந்தனர்.
அப்பொழுது ஆயர் என்னிடம் தெரிவித்தது எம் சகோதரத்துவத்துக்குள்
பிரச்சனைகள் ஏற்படா வண்ணம் நாம் பாதுகாக்க வேண்டும். ஆகவே நாங்கள் இரு பகுதினரும் பேசி தீர்க்கும் வரைக்கும் வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
பின் எமது உறுப்பினர்கள் சிலருடன் நான் உரையாடியபின் இவ் விடயத்தை
சுமூகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கையை மன்னார் ஆயர் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிப்பதால் நாம் இவற்றை தற்காலிகமாக இவ் நிர்மானத்தை இடை நிறுத்துவோம் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே நான் இவற்றை இடைநிறுத்தினேன். அதன்பின் எமது உறுப்பினர் கொன்சன் குலாஸ் இது விடயமாக அவசரக் கூட்டத்துக்கான கடிதத்தை என்னிடம் கையளித்திருந்தார்.
இது சம்பந்தமாக ஆயரிடம் விட்டபொழுது ஒரு அவசரக் கூட்டத்துக்கு அவசியம் இல்லை என தெரிவித்திருந்தபொழுதும் 12 உறுப்பினர்கள் கையொப்பங்கள் வைத்திருந்தமையால் இவ் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளோம்.
நான் இது விடயமாக ஆயரின் கவனத்துக்கு கொண்டு சென்றபொழுது நாங்கள் சுமூக தீர்வை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும்பொழுது இவ் கூட்டம் ஒரு அவசியமற்றது என ஆயர் என்னிடம் தெரிவித்தார்.
ஆகவே நாம் இந்த இடத்தில் மதம் கட்சி என்ற நிலையிலிருந்து விடுபட்டு
அமைதிக்கும் நீதிக்கும் சமாதானத்துக்கும் அத்துடன் சட்டத்தையும் நோக்கி
செயல்படும்படி வேண்டி நிற்கின்றேன் என்றார்.
பிரதேச சபை உறுப்பினர்கள் திருக்கேதீஸ்வர வளைவு விடயத்தை என்னிடம் ஒப்படைத்தமையாலே நான் செயல்பட்டேன். தவிசாளர் S.H.M.முஜாஹீர்
Reviewed by Author
on
July 04, 2019
Rating:

No comments:
Post a Comment