மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரி மாணவன் S. சயன்டானி-தேசிய உதைபந்து அணியில்
இலங்கை தேசிய உதைபந்து அணியில் இடம்பிடித்த மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரி மாணவன் S. சயன்டானி எனும் மாணவன் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரி வரலாற்றில் முதல்முறை தேசிய அணிக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவன் இவர் ஆவார்.
எதிர்வரும் மாதங்களில் ஜோர்தான் நாட்டில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட தொடரில் எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அணியில் இணைந்து இவர் விளையாடவுள்ளார்.
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற 3 சுற்றுக்கள் கொண்ட தொடரில், நாடு முழுவதில் இருந்து பலர் பங்குபற்றி தமது திறமையை வெளிக்காட்டி இருந்தனர். அவர்களில் இருந்தே இவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பலவருடங்களாக இம்மாணவனை பயிற்றுவித்து, இம்மாணவன் தேசிய அணியில் இடம்பெற பயிற்சி வழங்கிய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரும், பயிற்றுவிப்பாளருமான திரு. பற்றசன் அவர்களையும் இம்மாணவனையும் கல்லூரிச்சமூகத்தினையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாரட்டுகின்றோம்.
மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரி மாணவன் S. சயன்டானி-தேசிய உதைபந்து அணியில்
Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment