அமைச்சர்கள் அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது: எம்.ஏ.சுமந்திரன் -
நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படும், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு வரைவு முன்வைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாக அதனை எதிர்த்தது. தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்தியாளர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கூட்டு அரசு அமைக்கப்பட்ட பின்னர் 2015ஆம் ஆண்டு இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்த்தது. நாம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் எதிர்த்தோம்.
கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சரவையை அதிகரிக்க வேண்டும்? இருக்கின்ற அமைச்சுக்களைப் பகிர்ந்துக் கொள்ளலாம்.
அமைச்சராகித் தான் கூட்டு அரசை ஆதரிக்க வேண்டும் என்று இல்லையே. நாங்களும், மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு அரசின் சில விடயங்களுக்கு ஆதரவு வழங்குகின்றோம்.
2015ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த தீர்மானத்திலிருந்து மாறவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது: எம்.ஏ.சுமந்திரன் -
Reviewed by Author
on
July 31, 2019
Rating:
Reviewed by Author
on
July 31, 2019
Rating:


No comments:
Post a Comment