தமிழக மீனவர்கள் ஏழுபேர் கைது! -
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வேளை அவர்களின் படகுகளில் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துள்ளது.
இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக அந்த படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இராமேசுவரம் மீனவர்களின் படகினை நெருங்கி அவர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது இராமேசுவரம் மீனவர்கள் ஜோசப் பால்ராஜ் (37), பெனிட்டோ (40), நாகராஜ் (45), இன்னாசி (22), சுப்பிரமணி (35), முனியசாமி (48), சத்தியசீலன் (25) ஆகிய 7 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் ஏழுபேர் கைது! -
Reviewed by Author
on
July 29, 2019
Rating:

No comments:
Post a Comment